செய்திகள்

பதினைந்து வயது நிரம்பிய மாணவி தமது கணவருடன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பதினைந்து வயது நிரம்பிய மாணவிஇ மூன்று மாதங்களுக்குப் பின்னர் தமது கணவருடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளர்.

 இச்சம்பவம் ஊவா – பரணகமையில் 05.04.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.

 பாடசாலை சென்றுஇ குறிப்பிட்ட மாணவி வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் ஊவா – பரணகமைப் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 26ந் திகதி முறைப்பாடு செய்துள்ளனர்.

 இம் முறைப்பாட்டையடுத்துஇ பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டிருந்த வேளையில்இ மூன்று மாதங்களுக்குப் பின்னர் காணாமல் போனதாக குறிப்பிடப்படும் மாணவிஇ தனது கணவனுடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

 இவ் இருவரும் இள வயதுகளை உடையவர்களென்பதும்இ அவர்கள் விசாரனையின் பின்னர் வெலிமடை நீதவான் நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்றும்இ பொலிஸார் தெரிவித்தனர்.

 மாணவிக்கு 15 வயது அவரது கணவனுக்கு 17 வயது என்றும் தெரியவந்துள்ளது.

n10