செய்திகள்

பதினொரு பேர் கொண்ட தேசிய ஆலோசனை சபை நியமனம்

பதினொரு பேர் கொண்ட தேசிய ஆலோசனை சபை என்ற உயர் சபையை நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வண. சோபித தேரர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சம்பந்தன், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இதில் அங்கம் வகிக்கின்றனர்.

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம், அரசியல் யாப்பு திருத்தங்கள், முன்னைய அரசின் ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், ஜனாதிபதி தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள், கொழும்பு மற்றும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் கனிப்பிரச்சினைகள் போன்ற பல விவகாரங்கள் தொடர்பில் இந்த சபை ஆராயவிருக்கிறது.