செய்திகள்

பத்தனையில் சுரங்கப்பாதை போக்குவரத்துக்காக திறந்து வைப்பு (வீடியோ,படங்கள்)

அட்டன் – நுவரெலியா ஏ-7 பிரதான வீதியின் பத்தனை பகுதியில்  நிர்மாணிக்கப்பட்ட   சுரங்கப்பாதை

போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

22.05.2015 அன்று வெள்ளிக்கிழமை முதல் குறித்த பாதை போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, பதுளை உடரட்ட ரயில் பாதைக்கு கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பாதை 30  மீற்றர்    உயரமும் 20 மீற்றர் அகலமும் கொண்டது.

பழைய சுரங்கப் பாதையால் கனரக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையில் இந்த புதிய சுரங்கப் பாதை அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பழைய சுரங்கப்பாதையில் பாதசாரிகள் மட்டும் செல்ல முடியும் எனவும் புதிய இச்சுரங்கப்பாதையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இரவு நேரங்களில்  அதை ஒளிர செய்யவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=tGCBnOCXMIc&feature=youtu.be” width=”500″ height=”300″]

Underground way (2) Underground way (3) Underground way (4) Underground way (6)