செய்திகள்

பத்தனை ஆற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் வழங்கும் பத்தனை ஜெயஸ்ரீபுர பகுதி ஆற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலம் ஒன்று இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதிக்கு குளிக்க சென்ற ஒருவர் சிசுவின் சடலத்தை கண்டு திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் சிசுவை மீட்டுள்ளனர்.

தாய் சிசுவை பிரசவித்தவுடேனே இவ்வாறு ஆற்றில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலைக்கு பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.