செய்திகள்

பத்து ஆண்டுகளில் இலங்கையிலிருந்து வெளியே சென்ற 19.96 பில்லியன் டொலர் கறுப்புப் பணம்

அரசியல்வாதிகள் வர்த்தகர்கள் குற்றவாளிகள் வரியேய்ப்பு செய்பவர் உட்பட ஊழல் பேர்வழிகள் கடந்த பத்தாண்டுகளில் 19.96 பில்லியன் டொலர்களை நாட்டுக்கு வெளியே சட்டவிரோதமாக கொண்டு சென்றிருப்பதாக கறுப்புப் பணம் தொடர்பான நடவடிக்கைகளை கண்டறியும் அமைப்பொன்று தெரிவித்திருக்கிறது.
2004 தொடக்கம் 2013 வரையிலான காலப்பகுதியில் 2.88 ட்ரில்லியன் ரூபாவுக்கு சமனான தொகை சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டிருப்பதை இந்த விபரங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்தப் பணத்தில் ஊழல் மோசடி மூலம் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணமும் உள்ளடங்கும். இவை தொடர்பான கணிப்பீடு அதாவது பணப் பரிமாற்றம் தொடர்பான இலகுவில் கண்டுபிடிக்க முடியாதவையாகும்.
சென்மதி நிலுவையில் சில சட்டவிரோதமாக இடம்பெறும் பரிவர்த்தனைகள் குறிப்பிடப்படுவதில்லை. ஏனெனில் வங்கிகள் மற்றும் போலியான பணப்பரிவர்த்தனை மேற்கொள்பவரினால் எழுத்துமூலமாக அல்லாமல்  மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் இலகுவில் கண்டறிவது கடினமானது என அமெரிக்க ஆய்வொன்று வெளிப்படுத்துகிறது.
2011 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற பணம்  அதிகமாக இருந்துள்ளது. 4.6 பில்லியன் டொலர் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. 2009 உடன் ஒப்பிடும் போது நிதி வெளிப்பாய்ச்சல் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2010 இல் 2.63 பில்லியன் டொலர் வெளியே சென்றுள்ளது. விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த ஒரு வருடத்தின் பின்னர் இது இடம்பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியான பொருளாதாரம் பின்னடைவு கண்ட காலகட்டமாகும்.
அந்த வருடம் இலங்கையிலிருந்து 1.45 பில்லியன் சட்டவிரோதப் பணம் வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலகட்டத்தில் 2004 இல் 1.48 பில்லியன் டொலர் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. 2004 ஏப்ரலில் மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றிருந்தார். 2005 இல் 1.38 பில்லியன் டொலர் நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. அச்சமயம் ராஜபக்ஷ பிரதமராக பதவி வகித்திருந்தார். 2005 நவம்பரில் ரட்ணசிரி விக்ரமநாயக்க பிரதமராக பதவியேற்றிருந்தார். 2010 ஏப்ரலில் டி.எம்.ஜயரட்ன பிரதமராக பதவி வகித்தார்.
ஆலோசனை நிறுவனமான வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட குளோபல் பினான்ஸியல் இன்டர்கிரிட்டி என்ற அமைப்பே சட்டவிரோத பணம் தொடர்பாக கண்டுபிடித்து ஆய்வு செய்கின்றது. சட்டவிரோத மூலதன நகர்வுகளும் கறுப்புப் பணத்துடன் சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் தொடர்பிருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. போதைப் பொருளின் சொர்க்கமாக கருதப்படும் கொலம்பியாவிலும் பார்க்க இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக பணம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமை மோசமானதாக காணப்படுகிறது.
ஏமாற்று தன்மையான வர்த்தக பொருட் கொள்வனவுக்கான பட்டியலினால் 17 பில்லியனுக்கும் மேற்பட்ட  தொகையை இலங்கை இழந்திருக்கிறது. சுங்க பிரிவிற்கு இந்த இழப்பு ஏற்பட்டிருப்பதாக குளோபஸ் பினான்ஸியல் இன்டர்கிரிட்டி சேகரித்திருக்கும் விபரங்கள் வெளிப்படுத்துகின்றன.  வரியேய்ப்புக்காக அதிகளவிலான கொள்வனவு பட்டியல் அல்லது குறைந்தளவிலான கொள்வனவு பட்டியலை மேற்கொள்வதாக இது அர்த்தப்படும். சட்டவிரோத பணம் வெளிநாடுகளுக்குள் கொண்டு செல்லப்படும் 149 நாடுகளில் 53 ஆவது நாடாக இலங்கை உள்ளது. சராசரியாக 1.99 பில்லியன் டொலர் வருடாந்தம் நாட்டைவிட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
 n10