செய்திகள்

பத்து ஆண்டுகள் கடந்தன இன்று…

பத்து ஆண்டுகள் கடந்தன இன்று
முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து;
செத்துப் போனவரும் பாதிக்கப்பட்டவர்களும்
அங்கே யார்..? எமது இரத்த உறவுகள்!

கொத்துக் கொத்தாய் அவர்கள் கொலை
செய்யப்பட்டு குவிக்கப்பட்ட போது …
கத்திய கதறல்கள் நந்திக்கடல்
தாண்டக் கூடாது என்பதில்
ஒத்துக் கைகோர்த்து நின்றன
ஒரு சிலநாடுகள் இனவெறியோருடன்

சித்தம் நடுங்க மரண வலியுடன்
உயிர் பிச்சைக்கு துடிக்கையில்
விக்கித்து நின்றது உலகத் தமிழினம்
தம் கையறு நிலையெண்ணி….

முப்பது ஆண்டு ஆயுதப் போராட்டம்
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று
எக்காளமிட்டு கொட்டி முழக்குவோரே …
வெட்கித்தலை குனியுங்கள் உமையெண்ணி!

அத்தகையோர்கள் கருத்தொத்து மீண்டும்
காற்புள்ளி வைத்து தொடராதிருப்பது
எத்தகைய பெரும் செயலென்று
சீர்தூக்கி பாருங்கள் சிந்தை தெளிந்திரும்

வாக்கு கொடுத்தது யாருக்கு தெரியுமா-தன்
இனத்தை தரணியிலே தலைநிமிர வைத்து
காத்து நிக்கின்ற பெரும் கவசமாம்
அஞ்சா நெஞ்சுரம் கொண்ட மேதகு …..

-பிறேமலதா பஞ்சாட்சரம்