செய்திகள்

பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார்

பொதுசேவை, அறிவியல், மருத்துவம், தொழில், கலை , இலக்கியம், என துறை வாரியாக செய்த சாதனைகளை பாராட்டும் விதமாக மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும் பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று வழங்கி கவுரவித்தார்.

அத்வானி, அமித் பச்சன், பிரகாஷ் சிங் பாதல், பேராசிரியர் ராமசாமி சீனிவாசன் உள்ளிட்ட 9 பேருக்கு பத்மவிபூஷண் விருதும், தமிழக முன்னாள் தேர்தல் கமிஷ்னர் கோபால்சாமி, கர்நாடக இசை கலைஞர் சுதா ரகுநாதன், பில்கேட்ஸ் உள்ளிட்ட 20 பேருக்கு பத்மபூஷன் விருதும், அசோக் பகவத், சஞ்சய் லீலா பன்சாலி, ராகுல் ஜெயின், தமிழகத்தைச் சேர்ந்த ராஜாராமன் உள்ளிட்ட 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. மொத்தம் 104 பேருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த விருதுகளை வழங்கினார். விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி அன்சாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மால்வியா குடும்பத்தினர் பாரத ரத்னா விருதை பெற்றனர்.