செய்திகள்

பந்துலவின் சவாலையேற்று விவாதத்திற்கு வர தயார்: ரவிகருணாநாயக்க

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் சவாலை ஏற்று பகிரங்க விவாதத்திற்கு செல்ல தான் தயாராகவே இருப்பதாவும் அனால் அவ்வாறு விவாதத்தை நடத்துவதாக இருந்தால் முன்னாள் நிதியமைச்சரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்‌ஷவுடன் நடத்துவதே சிறந்ததெனவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக விவாதத்திறகு வருமாறு சில அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றனர். நாம் பகிரங்க விவாதத்திற்கு தாயர் ஆனால் அந்த விவாதம் முன்னாள் நிதி அமைச்சரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் நடைபெறுவதே சிறந்ததாக இருக்கும்.
ஆனால் அவருக்கு மக்கள் முன் வந்து விவாதத்திற்கு வர முடியாவிட்டால்  எவ்வித பொறுப்பும் இல்லாத அமைச்சுப்பதவியை வகித்த முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் விவாதத்தை நடத்தவும் தயார். என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொ ன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.