செய்திகள்

பந்துவீச்சில் சாதித்த இலங்கை அணி துடுப்பாட்டத்தில் பலவீனமான நிலையில்

நியுசிலாந்திற்கு எதிராக வெலிங்டனில் இன்று ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணியை 221 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச்செய்த இலங்கை அணி பின்னர் 5 விக்கெட் இழப்பிற்கு 78ஓட்டங்கள் என்ற தடுமாற்றமான நிலையிலுள்ளது.
நாணய சுழற்சி வெற்றிபெற்று நியுசிலாந்தை இலங்கை அணி துடுப்பெடுத்தாட பணித்தமை சாதகமான முடிவாக அமைந்தது. பந்துவீச்சிற்கு சாதகமான சூழ்நிலையில் சிறப்பாக பந்துவீசிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் நியுசிலாந்து அணியை 221 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச்செய்தனர்.
நியுசிலாந்து அணி சார்பில் கேன் வில்லியம்சன் 69 ஓட்டங்களை பெற்றார், கடந்த டெஸ்ட போட்டியில் மிகச்சிறப்பாக ஆடிய மக்கலம் ஓட்டங்கள் எதனையும் பெறாமலே ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி சர்ர்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நுவன் பிரதீப் மற்றும் சுரங்க லக்மல் ஆகியோர் தலா 4, 3 விக்கெட்களைகைப்பற்றினர்
பின்னர் தனது முதலாவது இனிங்சை ஆரம்பித்த இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து முதலாவது நாள் ஆட்டநேர முடிவில் ஐந்து விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களை பெற்றுள்ளது. குமார் சங்ககார ஆட்டமிழக்கமால் 33 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளது அணிக்கு நம்பிக்கையளிக்க கூடிய விடயமாக உள்ளது.