செய்திகள்

பனாமாவில் உள்ள தகவல்கள் உண்மையானதா ? அரசாங்கத்திற்கு சந்கேம் என்கிறார் ராஜித

பனாமா ஆவணத்தில் காணப்படும் விடயங்கள் உண்மையானதா என்ற சந்தேகங்கள் காணப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பனாமா ஆவணத்தில் இலங்கையர்களில் பெயர்களும் காணப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை போன்ற சிறிய நாடுகள் நேரடியாகச் சென்று அவ்வாறான நபர்கள் பற்றிய கணக்கு விபரங்களை கேட்க முடியாது. அவ்வாறு கேட்டாலும் அவர்கள் தரப்போவதில்லை. எனவே அமெரிக்கா போன்ற நாடுகளின் விசாரணைகளின் அடிப்படையிலேயே மேலதிக விசாரணைகளைத் தொடமுடியும் என்றார்.

அதேநேரம், பனாமா விவகாரம் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட செயற்பாடு என்ற விமர்சனமும் உள்ளது. ரஷ்ய பிரதமர் புட்டீன் உள்ளிட்ட அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் பற்றிய விபரங்களே வெளியாகியுள்ளன. இவ்வாறான நிலையில் இதன் உண்மைத் தன்மை குறித்த கேள்வியும் காணப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.