செய்திகள்

பனைமரக் குற்றிகளை கடத்திய சாரதிக்கு ஆட்பிணை

யாழ்.குப்பிளானிலிருந்து புன்னாலைக்கட்டுவன் பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி பனைமரக் குற்றிகளைக் கடத்திய சாரதியை 70 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆட்பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பிணை முறியில் செல்ல மல்லாகம் நீதிமன்றம் நேற்று முன்தினம் 15 ஆம் திகதி புதன்கிழமை அனுமதியளித்துள்ளது.

கடந்த 09 ஆம் திகதி குப்பிளானிலிருந்து புன்னாலைக்கட்டுவன் பகுதிக்கு உழவு இயந்திரத்தில் பனைமரக் குற்றிகளைக் கடத்திய சாரதியைப் பொலிஸார் கைது செய்ததுடன் உழவு இயந்திரத்தையும் பறிமுதல் செய்திருந்தனர்.சாரதிக்கெதிராகச் சுன்னாகம் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

சுன்னாகம் பொலிஸார் தாக்கல் செய்த இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்கென எதிர்வரும் யூலை மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கபக்பட்டுள்ளது. யாழ்.நகர் நிருபர்-