செய்திகள்

பன்னாட்டு படைகளின் முகாம்கள் மீது போஹோ ஹராம் தாக்குதல்

நைஜீரியா –சாட் எல்லையிலுள்ள பன்னாட்டு படைகளின் பாரிய முகாமொன்றை போஹோ ஹராம் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக அப்பகுதியிலிருந்து தப்பியோடிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களில்,பெருமளவு படையினரும், பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நைஜீரியா சாட், கமரூன் உட்பட பல நாடுகளின் படையினர் கடுமையாக போராடியபோதிலும்,அவர்களிடம் வெடிமருந்துகள் முடிவடைந்துவிட்டதால் சீருடைகளை களைந்துவட்டு பொதுமக்களுடன் அவர்களும் தப்பியோடியுள்ளனர்.
போகோ ஹராம் கிளர்ச்சிக்காரர்களின் நடவடிக்கைகள் காரணமாக இவ்வருடம் 1000 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நைஜீரியாவிற்கான மிகப்பெரும் அச்சறுத்தலாகவும், ஆபிரிக்க பொருளாதாரத்திற்கான ஆபத்தாகவும் இது அமைந்துள்ளது.