செய்திகள்

பன்றி தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயங்களுடன் தொழிலாளி வைத்தியசாலையில்

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் –  எரோல் தோட்டம் 06ம் இலக்க மலையில் தொழில் புரிந்து கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் பன்றி தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயங்களுடன் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

 இந்த சம்பவம் 20.04.2016 அன்று காலை 11.00 மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

 குறித்த பெண் தொழிலாளி அவரது பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேலையில் தேயிலை மலைக்குள் புகுந்த பன்றி குறித்த தொழிலாளியை தாக்கியதாக பாதிக்கப்பட்ட தொழிலாளி தெரிவித்தார்.

 காடுகளில் உள்ள பன்றிகள் தோட்டப்பகுதிகளுக்கு வருவதனால் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தோட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

n10