செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை

பப்புவா நியூ கினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அபாயகரமான சுனாமி பேரலைகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று (செவ்வாய்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவு கோலில் 7.4 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், பப்புவா நியூகினியாவின் வடகிழக்கே கோகோபோ நகரின் தெற்கே 140 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் பத்து கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனையடுத்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 300 கி.மீ தொலைவுக்குள் சுனாமி பேரலைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

பப்புவா நியூ கினியாவில் கடந்த வாரமும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.