செய்திகள்

பயங்கரவாதத்திற்கு உதவும் நாடுகளின் பட்டியலிலிருந்து கியுபாவை நீக்குகின்றது அமெரிக்கா

பயங்கரவாதத்திற்கு உதவும் நாடுகளின் பட்டியலிலிருந்து கியுபாவை நீக்குவதற்கு அமெரிக்க வெளிவிவகார அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.
அமெரிக்க செனட்டின் வெளிவிவகார குழுவின் உறுப்பினர் பென்கார்டின் இதனை முக்கியமான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.அந்த நாட்டுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான உறவுகளை ஏற்படுத்துவதை நோக்கிய நடவடிக்கையிதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரஙகங்களை ஏற்படுத்தலாம்,கியுபாவிற்கான கடனுதவிகளிற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பயங்கரவாதத்திற்கு உதவும் நாடுகளின் பட்டியலில் கியுபா, சிரியா, சூடான் மற்றும் ஈரான் ஆகியன இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாஸ்க் பிரிவினைவாதிகளுக்கும், கொலம்பியாவின் பார்க் கிளர்ச்சியாளர்களுக்கும் கியுபா ஆதரவு வழங்குவதாக தெரிவித்து 1982 இல் அமெரிக்கா அந்த நாட்டை குறிப்பிட்ட பட்டியலில் இணைத்தது குறிப்பிடத்தக்கது.