செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிரான பரந்துபட்ட கூட்டணிக்கு அழைப்பு

பயங்கரவாதத்தினை எதிர்கொள்வதற்கு பரந்துபட்ட கூட்டணியொன்றிற்கு அழைப்புவிடுத்துள்ள ஐரோப்பியஓன்றியத்தின் வெளிவிவகாரகொள்கைக்கான தலைவர் பெட்ரிகா மொகெரினி அழைப்பு விடுத்துள்ளார்.இஸ்லாமிய தேசங்களையும் இதில் இணைந்துகொள்ளுமாறு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
பிரசல்ஸில் இன்று ஆரம்பமான ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும், முஸ்லீம் நாடுகளுடனும்,ஒத்துழைப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் மாத்திரம் நாங்கள் இந்த ஆபத்தை எதிர்கொள்ளவில்லை,முஸ்லீம் நாடுகளில் ஆரம்பித்து உலகின் பல நாடுகளுக்கும் இந்த ஆபத்து பரவுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.