செய்திகள்

பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது

மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்த முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்புகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற புத்திஜீவிகளுடனான சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே அமைச்சர் ருவன் விஜயவர்தன இந்த விடயங்களைக் கூறினார்.

அண்மையில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் பல்வேறு தரப்புகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதம் தொடர்பில் மக்களிடத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பொது எதிரணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாட்டில் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளார்.

n10