செய்திகள்

பயங்கரவாதிகள் மீண்டும் உருவாகிவிடுவார்களோ என்ற கவலையே தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கின்றார் மஹிந்த

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாகிவிடுமோ என்ற கவலையே தன்னிடம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நேற்று அநுராதபுரம் ஶ்ரீ மகாபோதி விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு வரும் போது எனது மனம் ஆறுதல் அடைகின்றது. ஆனால் என் மனதில் கவலையொன்றும் ஏற்படுகின்றது. இந்த இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். ஆனால் அவர்கள் தற்போது இல்லை. அவர்கள் மீண்டும் உருவாகிவிடுவார்களோ என்ற கவலையே இருக்கின்றது. அப்படி நடக்கக்கூடாது என வேண்டிக்கொள்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்.