செய்திகள்

பரந்தன் நெற்களஞ்சிய விபரங்களைக் கோரியுள்ள பாதுகாப்பு அமைச்சு

பரந்தன் நெற்களஞ்சியம் தொடர்பான விவரங்களை வழங்கமாறு பாதுகாப்பு அமைச்சு இராணுவத்தின் 573 ஆவது படையணிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி வடக்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான குறித்த நெற்களஞ்சியத்தை யுத்த காலத்தில் இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர்.

3 ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியில் அமைந்துள்ள இந்தக் களஞ்சியத்தில் இருக்கும் இராணுவத்தின் 573 படையணியை விலக்குமாறு கோரி அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்தே குறித்த நெற்களஞ்சியம் குறித்த விவரங்களைக் கேட்டு அதில் முகாமிட்டுள்ள 573 ஆவது படைணயிக்கு பாதுகாப்பு அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது.

இதன் பிரதி ஒன்று கடந்த திங்கட்கிழமை கரைச்சி வடக்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.