செய்திகள்

பராக் ஒபாமா விரைவில் இலங்கை வருவார்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூடிய விரைவில் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர்  அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்து;ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இங்குள்ள தலைவர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்வது சாதாரணமானது. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர் ஒருவர் இலங்கக்கு விஜயம் மேற்கொள்வது சாதாரணமான விடயமல்ல.

இங்கு தற்போது நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாலே அவர் இங்கு வர தீர்மானித்துள்ளார். கூடிய விரைவில் அவர் இங்கு வரவுள்ளார். அமெரிக்கா மற்றும் இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே இவர் இங்கு வரவுள்ளார். இவரின் வியஜம் தொடர்பாக தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.