செய்திகள்

பருத்தித்துறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து கூட்டாக நடாத்தும் தொழிலாளர் தின நிகழ்வு பருத்தித்துறையில் இடம்பெறவுள்ளது. 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை, சிவன்கோவில் திருமண மண்டபத்தில் பி.ப 3.00 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும்.

தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்திற்காரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோரை கண்டறிதலை வலியுறுத்தியும்;, தமிழ்த் தொழிலாளர்கள், தமிழ் விவசாயிகள், தமிழ் மீனவர்கள் மீதான ஒடுக்குமுறையிலிருந்து விடுபடல், காணி அபகரிப்பை தடுத்தல், மீள் குடியேற்றத்தை வலியுறுத்துதல், இராணுவ மயமாக்கலை தடுத்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகளை நிறுத்தல்;, கொடிய பயங்காரவாத தடைச் சட்;டத்தை நீக்குமாறு வலியுறுத்தல் என்பவற்றிற்காக அனைத்து தமிழ் மக்களையும் இம் மேதினத்தில் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
R-06