செய்திகள்

பறிக்கப்பட்ட குடியுரிமைமீண்டும் கிடைக்கும்: இராணுவ வைத்தியசாலை சென்ற பொன்சேகா நம்பிக்கை

மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் பறிக்கப்பட்ட தன்னுடைய குடியுரிமையும், இராணுவப் பட்டங்களும் தனக்கு மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா மீண்டும் வெளியிட்டிருக்கின்றார்.

கொழும்பிலுள்ள இராணுவ வைத்தியசாலைக்கு இன்று சென்ற பொன்சேகா, அங்கு சிகிச்சை பெற்றுவரும் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய போதே இந்த நம்பிக்கையை வெளியிட்டிருக்கின்றார். இராணுவத் தளபதி பதவியை இழந்த பின்னர் இராணுவ வைத்தியசாலைக்கு பொன்சேகா செல்வது இதுதான் முதன்முறையாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல் பிரச்சார காலத்தில் தன்னுடைய குடியுரிமையையும், இராணுவப் பட்டங்களையும் மீட்டுத் தருவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

“ஜனாதிபதியும் பிரதமரும் இதற்கான உறுதிமொழியை மட்டும் வழங்கவில்லை. அதற்கான கால அட்டவணை ஒன்றையும் தெரிவித்தார்கள். அதனை எவ்வாறு செய்யப்போகின்றார்கள் என்பதையும் வெளியிட்டார்கள். அதனால், அந்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறேன்” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

5

3

001

00