செய்திகள்

பலாலி , முழங்காவில் தனிமைப்படுத்தும் முகாம்களில் 12 பேருக்கு கொரோனா!

வடக்கின் பலாலி மற்றும் முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 12 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 231 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய பரிசோதனையில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த  4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று   24 பேருக்கான  கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

-(3)