செய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கு 24ம் திகதி முதல் விண்ணப்பிக்கலாம்

புதிய கல்வியாண்டு தொடர்பில் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 24ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்த விண்ணப்பங்களை இணையம் மற்றும் எழுத்து மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க மாணவர்களுக்கு முடியும்.

கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதேவேளை, புதிய கல்வி ஆண்டு தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்த அனுமதிப் பத்திர கையேடு எதிர்வரும் 22ம் திகதி வௌியிடப்படவுள்ளது.

இது தொடர்பில் நாளை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, புதிய கல்வியாண்டு தொடர்பில் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 24ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

n10