செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் கோரப்படும்

2014 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதத்தின் முதலாவது வாரத்திலிருந்து கோரப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தாகவல்கள் அடங்கிய கையேடு வெளியிடப்படுமெனவும் அதன்பிரகாரம் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப முடியுமெனவும் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இணைத்துக்கொள்ளவுள்தாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.