செய்திகள்

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் இன்று முதல்: கல்வியற் கல்லூரி விண்ணப்பங்கள் நாளை முதல்

2014 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவங்கள் அடங்கிய கையேடு இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி நாடெங்கிலுமுள்ள புத்தக விற்பனை நிலையங்களில் இவற்றை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிவித்தல் நாளைய தினம் செய்தி பத்திரிகைகள் மூலம் வெளியிடப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரவித்துள்ளது.

இதேவேளை தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.