செய்திகள்

பல கேள்விகளுக்கு மத்தியில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகின்றது

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுமா? அல்லது தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில், தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகின்றது.இந்தச் சந்திப்பில் தீர்மானம் எடுக்கும்வரை நாடாளுமன்றத் தேர்தலின் எதிர்காலம் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இது குறித்த தமது இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் சுகாதார அதிகாரிகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான சூழல் சரியானதா என்பதை தீர்மானிக்கவும் கொரோனா வைரஸ் பரவுவது குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் இன்று திங்கள்கிழமை சுகாதார அதிகாரிகள், படையினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர் என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.(15)