செய்திகள்

பல பிரதேசங்களில் இன்று மாலை கடும் மழை பெய்யும்!

இன்று (19) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டில் பல பிரதேசங்களில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் , சபரகமுவ , மத்திய , வடமேல் , ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் இந்த மழையை எதிர்பார்க்க முடியுமெனவும் அத்துடன் மேல் , சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமெனவு; அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த காலப்பகுதியில் கடும் இடி , மின்னல் நிலவக் கூடுமெனவும் இதனால் இது தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)