செய்திகள்

பல புதுமைகளுடன் அறிமுகமாகும் விண்டோஸ் 10

மைக்ரோசொப்ட் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கும் விண்டோஸ் 10 (Windows 10) இல் முப்பரிமான தன்மை கொண்ட Headset மற்றும் மிகவும் புத்திக்கூர்மையுடைய தனிப்பட்ட உதவியாளர் (Cortana) ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒலிக்கட்டுப்பாட்டுக்குரிய தனிப்பட்ட உதவியாளரை (Cortana) கணனிகளுக்கு இந்த விண்டோஸ் 10 வழங்குகிறது.

இந்த விண்டோஸ் 10 இல் அப்ப்ஸ் (Apps) மற்றும் ஏனைய சிறப்பம்சங்கள் எந்த இடையூறும் இன்றி கணனி உப்பகரணங்களில் பயன்படுத்தப்படுவற்கு உதவும்.

விண்டோஸ் 7, 8 மற்றும் விண்டோஸ் தொலைபேசிகளை விண்டோஸ் 10 ஆக தரம் உயர்த்துவது இலவசம் என்று மைக்ரோசொப்ட் நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறது.
கடந்த வருடம் விற்ப்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டியிருக்கும் அப்பிள் தயரிப்புக்களுடன் போட்டியிடவேண்டிய தேவை மைக்ரோசொப்ட் நிறுவனத்துக்கு இருக்கின்றமை சுட்டிக்காட்டப்படுகிறது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=ZL_LP_tX-Lc” width=”500″ height=”300″]