செய்திகள்

பழமைவாய்ந்த மரம் வீழ்ந்ததில் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

இன்று அதிகாலை கொட்டகலை, பெரிய மண்வெட்டி தோட்டத்துக்கு அண்மையில் 150 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலமரம் வீழ்ந்ததில், ஒரு வீடு முற்றா சேதமடைந்துள்ளதுடன் அந்த வீட்டிலிருந்த 8 பேர் காயமடைந்ந நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 7 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேற்படி மரம் சரிந்து வீழ்ந்ததில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளததுடன் வீட்டுக்குள் இருந்த 8 பேரும் காயமடைந்துள்ளனர். இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் கூக்குரல் சத்தம் தோட்ட மக்களுக்கு கேட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தோட்ட மக்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளனர். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.