செய்திகள்

பழம்பெரும் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

உடல் நலக்குறைவால் தனது 82 ஆவது வயதில் ஸ்ரீகாந்த் நேற்று காலமானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

1965ஆம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். அந்தப் படத்தில் டாக்டராக நடித்த இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது.

இதேவேளை தங்கப் பதக்கம் படத்தில் சிவாஜி கணேசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்திருந்தார்.

சிவாஜி, கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகருடன் இணைந்து நடித்துள்ளார்.

200 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஸ்ரீகாந்த் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்து பெயர் பெற்றார்.

அத்தடன் சுமார் 50 படங்களில் கதாநாயகனாகவும் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.
ஸ்ரீகாந்தின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ராஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

-(3)