செய்திகள்

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சிகிச்சைப் பலனின்றி காலமானார். அன்னாருக்கு வயது 90. காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வி.எஸ் ராகவன் 1925-ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயது முதலே நாடகங்கள் மீது ஈர்ப்பு கொண்ட வி.எஸ்.ராகவன், காஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நாடகக் குழுக்களில் இணைந்து நடித்து வந்தார். பின்னர், சென்னை வந்த வி.எஸ்.ராகவன் இயக்குநர் பாலசந்தர் எழுதிய பல நாடகங்களில் நடித்துள்ளார். “நகையே உனக்கு நமஸ்காரம்’ என்ற பெயரில் இவர் நடித்த நாடகம் அந்த நாள்களில் பிரபலமானது.