செய்திகள்

பழம்பெரும் புராதன நகரான நிம்ருத் ஐஎஸ் தீவிரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் புராதன நகரான நிம்ருத்தினை ஐஎஸ் தீவிரவாதிகள் சூறையாடிய பின்னர் முற்றாக இடித்து தரைமட்டமாக்கியுள்ளதாக ஈராக் அரசாங்கம் அறிவித்துள்ளது.
தைகிரிஸ் ஆற்றங்கரையிலிருந்த உலகின் மிகவும் வலிமை வாய்ந்த சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய நிம்ருத் முற்றாக சிதைக்கப்பட்டுள்ளதாக ஈராக்கின் பழங்குடி இனத்தவர்களும் உறுதிசெய்துள்ளனர்.

_81270288_81270287

அந்த பகுதிக்கு வந்த ஐஎஸ் அமைப்பினர் முதலில் அங்கிருந்தவற்றை சூறையாடிய பின்னர் அதனை முற்றாக அழித்துள்ளனர்,அங்கு காணப்பட்ட சிலைகள், அரண்மனை, சுவர்கள் என அனைத்தையும் அவர்கள் தரைமட்டமாக்கியுள்ளனர் என பழங்குடி இனத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள யுனெஸ்கோ இதனை இனச்சுத்திரிகரிப்பு நடவடிக்கை என வர்ணித்துள்ளதுடன் இனப்படுகொலை எனவும் குற்றம்சாட்டியுள்ளது.இது ஈராக்கிய மக்களுக்கு எதிரான இன்னுமொரு தாக்குதல்,அந்த நாட்டில் நிகழ்ந்தவண்ணமுள்ள கலாச்சார சுத்திகரிப்பிலிருந்து எதுவும் தப்பாது என்பதை இது புலப்படுத்தியுள்ளது என யுனெஸ்கோ தலைவர் ஐரினா பொக்கோவா தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பினர் உலகின் விருப்பத்தையும்,மனித குலத்தின் உணர்வுகளையும் புறக்கணிப்பதாக ஈராக் அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பிட்ட அமைப்பின் கண்முடித்தனமான தாக்குதல்களின் தொடர்ச்சியாக 13 ம் நூற்றாண்டினை சேர்ந்த புராதன நகருhன நிம்;ருத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

assyrian_statues_nimrud_iraq_photo_unesco
மௌசுல் நகரிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ள நிம்ருத்; அஸ்சிரிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியது குறிப்பிடத்தக்கது.எகிப்து,துருக்கி, ஈரான் வரை அதன் ஆதிக்கம் அவ்வேளை காணப்பட்டது.
அந்த நகரில் எஞ்சியிருந்த பல பிரபலமான நினைவுச்சின்னங்கள் கடந்த வருடம் அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டு பிரிட்டனின் அருங்காட்சியகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள அதேவேளை நூற்றுக்கணக்கான அபூர்வமான கற்கள், தங்ககட்டிகள் போன்றவை பக்தாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.