செய்திகள்

பழிவாங்கும் இஸ்ரேல்

பாலஸ்தீன மக்களிடமிருந்து தான் சேகரித்த வருமானவரிகளை பாலஸ்தீன அதிகாரசபைக்கு கையளிப்பதை இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளது.
சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் இணைவதற்கு பாலஸ்தீன அதிகாரசபை மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கான பதில்நடவடிக்கையாகவே இஸ்ரேல் இதனை மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேல் 127 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஓட்டுமொத்த பாலஸ்தீனீயர்களுக்கு எதிரான கூட்டு தண்டனை என பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திரம் குறித்த எங்களை அபிலாஷையை இதன் மூலம் திசைதிருப்ப முடியும் என இஸ்ரேல் கருதினால்;, பொருளாதார அழுத்தங்களால் அதனை சாதிக்க முடியும் என அது கருதினால் இஸ்ரேல் பெரும் தவறை செய்வதாக நாங்கள் கருதுகிறோம் என்றும் பாலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.