செய்திகள்

பஸிலுக்கு மேலும் 3 மாத விடுமுறைக்கு அனுமதி

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மேலும் 3 மாதம் விடுமுறை பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் நிமல்சிறிபால டி சில்வா இன்று இது தொடர்பாக பாராளுமன்றத்தில அறிவித்த நிலையில் அதற்கு சபையில் அனுமதி  கிடைத்துள்ளது.
ஏற்கனவே 3மாத காலம் பஸில் ராஜபக்ஷ விடுமுறைப் பெற்றிருந்த நிலையில் அவர் நேற்றைய தினம் பாராளுமன்றத்துக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் அங்கு செல்லவில்லை இந்நிலையிலேயே அவருக்கு மேலும் மூன்று மாத கால விடுமறைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பஸில் ராஜபக்ஷ எதிர்வரும் 5ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் வாட்டில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.