செய்திகள்

பஸிலுக்கு மே ஏழுவரை விளக்கமறியல்

திவிநெகும நிதி மோசடி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவை மே ஏழாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று வழக்கு விசாரணைக்காக கடுவலை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துசென்றபோதே நீதவான் மேற்படி உத்தரவிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ச சிறைச்சாலை வைத்தியசாலை வாகனத்தில் நீதிமன்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.