செய்திகள்

பஸிலுக்கு 20 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பஸில் உள்ளிட்ட சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.