செய்திகள்

பஸிலை பார்க்க மஹிந்த வைத்தியசாலை சென்றார்

தனது சகோதரரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.தேசிய வைத்தியசாலையிலுள்ள கட்டணம் செலுத்தும் வாட்டுக்கு சென்று அவரை பார்வையிட்டு மஹிந்த அவரிடம் நலன் விசாரித்துள்ளார்.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பஸில் ராஜபக்ஷ நேற்று மாலை முதல் சிறைச்சாலையிலிருந்து வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையிலேயே அவரை பார்வையிட மஹிந்த அங்கு சென்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.