செய்திகள்

பஸில் இன்றும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் நிதி மோசடி விசாரணை பிரிவினர் மீண்டும் இன்றைய தினமும் விசாரணை நடத்;தியுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற விசாரணை அதிகாரிகள் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1மணி வரை மூன்று மணித்;தியாலங்கள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.
கடந்த 22ம் திகதி  அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர்  நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்சியாகவே இன்று விசாரணை நடத்தப்பட்டுள்ளன.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கடந்த 22ம் திகதி கைது செய்யப்பட்ட பஸில் ராஜபக்ஷ எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கபட்டுள்ள நிலையில் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் வாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.