செய்திகள்

பஸில் இன்று பாராளுமன்றம் செல்லவுள்ளார்

திவிநெம திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதிமோசடி விவகாராம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்துக்கு செல்லவுள்ளார்.
இன்று காலை சிறைச்சாலையின் வாகனம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து சிறைச்சலை அதிகாரிகளினால் அழைதத்துச் செல்லப்படவுள்ள இவர் பாராளுமனற சபை நடவடிக்கைகளில் கலந்தக்கொள்ளவுள்ளார்.
புதிய ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர் இன்றைய தினமே முதற்தடவையாக பஸில் பாராளுமன்றத்துக்கு செல்லவுள்ளார்.
மஹிந்தவின் தோல்வியின் பின்னர் அமெரிக்காவுக்கு சென்றிருந்த இவர் கடந்த 3 மாத காலப்பகுதிகளில் பாராளுமன்றத்தில் விடுமுறைக்கான அனுமதியை பெற்றுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் கட 21ம் திகதி இலங்கை திரும்பியிருந்த இவர் மறுநாள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 24ம் திகதி முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் வாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.