செய்திகள்

பஸில் , கோதா புதிய கட்சியை அமைக்கும் முயற்சியை கைவிட வில்லை : தோற்கடிப்போம் என்கிறது சு.க

புதிய கட்சியை அமைக்கும் பஸில் ராஜபக்‌ஷ மற்றும் கோதாபய ராஜபக்‌ஷ ஆகியோரின் முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்காது என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பஸில் ராஜபக்‌ஷ போன்றோரின் புதிய கட்சியை அமைக்கும் முயற்சிகள் இன்னும் கைவிடப்படவில்லை. எவ்வாறாயினும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த மஹிந்தானந்த அலுத்கமகே போன்றோர் அதற்கு இடமளிக்க மாட்டோம் என கூறியுள்ளனர். பஸில் ராஜபக்‌ஷ குழு , கோதாபய ராஜபக்‌ஷ குழுவுக்கு பயந்தோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் தேவைகளுக்கு ஏற்றால் போலோ எமக்கு செயற்பட முடியாது. என்பதனை தெளிவாக கூறிக்கொள்கின்றேன்.
n10