செய்திகள்

பஸில் தொடர்ந்தும் விளக்க மறியலில்

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும்  27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பசில் ராஜபக்ஷ தொடர்பான வழக்கு இன்று கடுவல நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது நீதவான் இந்த விளக்கமறியல் நீடிப்புக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை அவருக்கு பிணை வழங்குமாறு கோரி அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு 27ம் திகதி ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.