செய்திகள்

பஸில் மீண்டும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று மீண்டும் கடுவலை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்;டிருந்த கடந்த 22ம் திகதி கைது செய்யப்பட்டிருந்த பஸில் ராஜபக்ஷ கடுவலை நீதி மன்றத்தில் ஆஜர்செய்யபட்டதை தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் மீண்டும் இன்று நீதி மன்றத்தில் ஆஜர் செய்ப்படவுள்ளார்.
இதேவேளை அவருடன் கைது செய்யப்பட்ட மற்றைய நான்கு பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதன்போது பஸில் ராஜபக்ஷவுக்கு பிணைவழங்குமாறு அவர் தரப்பு சட்டத்தரணிகள் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.