செய்திகள்

பஸில் விளக்க மறியல் சிறையிலிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம்

கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வெலிக்கடை விளக்கமறியல் சிறையிலுள்ள வைத்தியசாலைக்கு மற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியர்களின் பரிந்துரையின் பேரில் மற்றும் பஸிலின் கோரிக்கைக்கு இணங்க அவர் தற்போது விளக்க மறியல் சிறையிலிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
எவ்வாறாயினும் அவருடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றைய இருவரும் தொடர்ந்தும் விளக்க மறியல் சிறையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.