செய்திகள்

பஸ்களில் அதிக கட்டணம் அறவிட்டால் 1955க்கு அறிவிக்கவும்

தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக வீடுகளுக்கு சென்றிருந்த தூர இடங்களை சேர்ந்தவர்கள் கொழும்பு திரும்புவதற்காக நேற்று முதல் விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சில பஸ்களில் அதிக கட்டணங்கள் அறவிடப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன்படி அவ்வாறாக அதிக கட்டணங்கள் அறிவிடுபவர்கள் தொடர்பாக முறைப்பாடுகளை பதிவு செய்ய போக்குவரத்து ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கிணங்கள 1955 என்ற இலக்கத்திற்கு அது தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும் அந்த முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கையெடுக்கப்படுமென போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

N5