செய்திகள்

பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து;16 பேர் காயம்

பிபிலை – பதுளை பிரதான வீதியில் நெவில்வல தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த 16 பேரும் பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் இருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபிலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.