செய்திகள்

பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது : போக்கு வரத்து ஆணைக்குழு

ஜூலை மாதம் முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்கு வரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வருடாந்த பஸ் கட்டண திருத்த கொள்கைத் திட்டத்துக்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென பஸ் உரிமையாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையிலேயே ஆணைக்குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.
தற்போதைய   புள்ளி விபரங்களின் பிரகாரம் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவையில்லையெனவும் இது தொடர்பாக பஸ் உரிமையாளர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.