பஸ் குடை சாய்ந்ததில் 37 பேருக்கு காயம் (படங்கள்)
மடுல்சீமை – பசறை வீதியில் இன்று (16.04.2015) நண்பகல் தனியார் பஸ் ஒன்று குடைசாய்ந்ததில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.
குருவிகலயில் இருந்து பசறை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றே 4 ஆம் கட்டை பகுதியில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 37 பேரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அவர்களில் 23 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதியின் கவனயீனம் காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவிக்கின்றனா்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.