செய்திகள்

பஸ் விபத்து – மின்சாரம் தடை

அட்டனிலிருந்து மஸ்கெலியா நல்லதண்ணி பகுதியை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் பௌத்த விகாரைக்கு அண்மித்த பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி அதி உயர் மின் கம்பம் ஒன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 19.04.2016 அன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மின் கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதால் நல்லதண்ணி ரிகாடன் பிரதேசத்திற்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

பஸ்ஸின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை அட்டன் பஸ் தரிப்பிடத்திலிருந்து பயணிகளை ஏற்றி புறப்பட்டு சென்ற குறித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த பயணிகள் எவருக்கும் பாதிப்பு எற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தடைப்பட்ட மின்சாரத்தை மீளமைக்க அட்டன் மின்சார சபையினர் நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர்

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

n10