செய்திகள்

பாகிஸ்தானிடமிருந்து 12 மாதங்களுக்குள் முதல் அணு ஆயுதத்தை வாங்குவோம்: ஐ.எஸ். அறிவிப்பு

பாகிஸ்தானிடம் இருந்து 12 மாதங்களுக்குள் முதல் அணு ஆயுதத்தை வாங்குவோம் என ஐ.எஸ். அமைப்பு அறிவித்துள்ளது.

அந்த அமைப்பின் இதழான “டபிக்”கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஐ.எஸ். தங்கள் அமைப்பு மிகப்பெரிய அளவில் விரிவடைந்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த நவீன யுகத்தில் மிகத்தீவிரமான குழுவாக தொடங்கப்பட்ட ஐ.எஸ். அமைப்பு இன்று மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளதாக அந்த இயக்கத்தால் சிறைபிடிக்கப்பட்ட பிரிட்டன் ஜான் காண்ட்லி கூறியுள்ளார்.

நைஜீரியாவில் செயல்பட்டு வரும் போகோஹரம் தீவிரவாதிகள் ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்துள்ள நிலையில் மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் அமைப்புகளை உள்ளடக்கிய பேரியக்கமாக ஐ.எஸ். உருவாகியுள்ளதாகவும் அந்த இதழில் கூறப்பட்டுள்ளது. தற்போது தங்களிடம் மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி கையிருப்பு உள்ளதால் விரைவில் லஞ்சம் லாவண்யத்தில் திளைக்கும் பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் ஆயுத தரகர்கள் உதவியுடன் அந்நாட்டிடம் இருந்து அணு ஆயுதங்களை வாங்க உள்ளதாகவும் அந்த அமைப்புஅறிவித்துள்ளது.